sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பழங்குடி மக்கள் சங்க மாவட்ட மாநாடு

/

பழங்குடி மக்கள் சங்க மாவட்ட மாநாடு

பழங்குடி மக்கள் சங்க மாவட்ட மாநாடு

பழங்குடி மக்கள் சங்க மாவட்ட மாநாடு


ADDED : செப் 16, 2011 12:05 AM

Google News

ADDED : செப் 16, 2011 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு பெட்டமுகிலாளம் அடுத்த தட்டக்கரை கிராமத்தில் நடந்தது.

சென்னப்பன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் நஞ்சப்பா ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் கெம்பன் மாநாட்டை துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் இலகுமையா தீர்மானங்கள் குறித்து பேசினார். 'வன உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு குடும்பத்துக்கு, 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். வனக்குழுக்கள் மூலம் பழங்குடி மக்களுக்கு சிறு மகசூல் பெற வழங்கப்பட்ட நிலத்தில் கிடைக்கும் வருவாயை, வனத்துறை அதிகாரிகள் பறித்து கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். 60 வயதான பழங்குடியினருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். விண்ணப்பித்த, 15 நாட்களில் பழங்குடியின மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாவட்ட செயலாளர் சின்னசாமி, நரசிம்மன், வெங்கடாசலம், கண்ணு, சுந்தரவள்ளி, பூதட்டியப்பா, மாரப்பா, சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கணேசன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us