/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் டி.ஐ.ஜி., கள்ளச்சாராய வேட்டை
/
கிருஷ்ணகிரியில் டி.ஐ.ஜி., கள்ளச்சாராய வேட்டை
ADDED : ஜூலை 29, 2024 02:03 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி, கிட்டம்பட்டி மற்றும் அந்தேரி பகுதிகளிலுள்ள மலைகளில், சேலம் டி.ஐ.ஜி., உமா தலைமையில் நேற்று கள்ளச்சாராய தேடுதல் வேட்டை நடந்தது. இதில், மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மற்றும் மதுவிலக்கு போலீசார் என, 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்கள், கிராமங்கள் தோறும் நடந்து சென்றும், மலைகளில் மேல் ஏறியும், கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுகிறதா, அதற்கான அறிகு-றிகள் ஏதேனும் உள்ளதா என விசாரித்தனர்.
கிராம மக்கள் மற்றும் மலைகளில் கால்நடைகளை மேய்சலுக்கு அழைத்து செல்லும் நபர்களிடம் பேசிய டி.ஐ.ஜி., உமா, கள்ளச்-சாராயம் காய்ச்சுவது, விற்பது மிகப்பெரிய குற்றம். தங்கள் கிரா-மங்களிலும், அருகே உள்ள மலைகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்-சுவோர் நடமாட்டம் அல்லது காய்ச்சுவது தெரிந்தால், உடனே அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்க வேண்டும். வனம் மற்றும் மலை பகுதியிலும் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால், தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள், போலீ-சாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சும் கிராமமாக காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டால், தங்கள் கிரா-மத்திற்கு அரசின் சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும், நிதி ஆதாரமும் கிடைக்காது. கிராம மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டுமென, அறிவுறுத்தினார்.

