தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., வேட்பாளர் விபரம்


ADDED : மார் 29, 2026 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பர்கூர்

பெயர் : டி.மதியழகன்

வயது : 59

படிப்பு : பி.எஸ்.சி., டி.எப்., டெக்

ஜாதி : வெள்ளாள கவுண்டர்

தொழில் : மாங்கூழ் தொழிற்சாலை

கிரானைட் ஏற்றுமதி,

அரசியல்வாதி

குடும்பம் : மனைவி கே.எம்.விஜயா, மகன், மகள்

அரசியல் அனுபவம்: 2004 முதல், 2017 வரை ஊர்க்காவல் படை கோவை மண்டல கமாண்டர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். ரஜினி மன்றத்திலிருந்து விலகி, 2019ல், தி.மு.க.,வில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். தி.மு.க., மாநில விவசாய அணி துணைத்தலைவர், 2021ல், தி.மு.க., சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, 2022 முதல், தி.மு.க., மாவட்ட செயலாளர்

கிடைத்தது எப்படி : கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர், பணபலம் மிக்கவர். மாவட்டம் முழுவதும் பல்வேறு நலப்பணிகளை, தன் சொந்த செலவில் பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். அனைத்து பகுதி மக்களிடமும் செல்வாக்கு பெற்றவர்.

ஓசூர்

பெயர் : எஸ்.ஏ.சத்யா

வயது : 55

படிப்பு : பத்தாம் வகுப்பு

குடும்பம் : மனைவி, மகன்.

ஜாதி : மலையாளி

தொழில் : தொழிற்சாலை

உரிமையாளர்,

முழுநேர அரசியல்வாதி.

அரசியல் அனுபவம்: * 2001-06 ஓசூர் நகராட்சி கவுன்சிலர். 2006-11 ஓசூர் நகராட்சி தலைவர். 2011 சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டி. 2014-18 மாவட்ட, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர். 2019ல் ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி. ஓசூர் மாநகர செயலாளர், 2022 முதல் ஓசூர் மாநகர மேயர்.

கிடைத்தது எப்படி: ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷிற்கு தான், 'சீட்' என்ற நிலையில், கட்சியின் 'பென் டீம்' இவருக்கு சாதகமான இருந்தது மற்றும் கட்சி தலைமையை பேசி சரிகட்டியதால் 'சீட்' கிடைத்துள்ளது.

வேப்பனஹள்ளி

பெயர் : பி.எஸ்.சீனிவாசன்

???? :வயது : 47

படிப்பு : பிளஸ் 2

குடும்பம் : மனைவி, மகன், மகள்.

ஜாதி : ஒக்கலிக கவுடா

தொழில் : விவசாயம்,

முழுநேர அரசியல்வாதி.

அரசியல் அனுபவம் :* 1999ல், தி.மு.க., உறுப்பினர். 2015ல், தி.மு.க., இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர். 2022 முதல், மாநில இளைஞரணி செயலாளர்.

கிடைத்தது எப்படி: ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷிற்குத்தான் முதலில் வேப்பனஹள்ளி தொகுதி ஒதுக்கப்பட்டது. அவர் போட்டியிட மறுத்ததால், சீனிவாசனுக்கு, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதியின் விசுவாசி என்பதால், எந்த எதிர்ப்பும் இல்லாமல், 'சீட்' பெற்றுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us