/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விஷம் குடித்த காதலி பலி : காதலனுக்கு தீவிர சிகிச்சை
/
விஷம் குடித்த காதலி பலி : காதலனுக்கு தீவிர சிகிச்சை
விஷம் குடித்த காதலி பலி : காதலனுக்கு தீவிர சிகிச்சை
விஷம் குடித்த காதலி பலி : காதலனுக்கு தீவிர சிகிச்சை
ADDED : செப் 05, 2011 11:53 PM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்ததால், மனமுடைந்த காதலர்கள் ஒன்றாக சேர்ந்து விஷம் குடித்தனர்.
இதில் காதலி பலியானார். ஊத்தங்கரை அடுத்த எலச்சூர் செம்மண்குழி மேடு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது நான்காவது மகள் மணிமேகலை(20). ப்ளஸ்2 வரை படித்து விட்டு, வீட்டில் இருந்துள்ளார். மணிமேகலை அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவரது மகன் பிரசாத்(22) என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மணிமேகலைக்கும் ஆந்திர மாநிலம் குப்பத்தை அடுத்த குண்டல்மடுவு கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டு, வரும் 8ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து, இரு வீட்டாரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தனர். காதலித்தவரை திருமணம் செய்ய முடியாததால், காதலன் பிரசாத்தை கல்குட்டை என்ற இடத்திற்கு வரவழைத்தார் மணிமேகலை. அங்கு, இருவரும் விஷம் குடித்து மயங்கியுள்ளனர்.
அந்த வழியே சென்றவர்கள், இருவரையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல்சிகிச்øகாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணிமேகலை சிகிச்சை பலன் இன்றி இறந்தார். உயிருக்கு ஆபத்தானநிலையில் காதலன் பிரசாத் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விசாரிக்கின்றார்.