/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை : கிருஷ்ணகிரியில் கலெக்டர் பேச்சு
/
சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை : கிருஷ்ணகிரியில் கலெக்டர் பேச்சு
சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை : கிருஷ்ணகிரியில் கலெக்டர் பேச்சு
சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை : கிருஷ்ணகிரியில் கலெக்டர் பேச்சு
ADDED : செப் 05, 2011 11:54 PM
கிருஷ்ணகிரி: ''சிறந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும்,'' என்று ஆசிரியர் தினவிழாவில், கலெக்டர் மகேஸ்வரன் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தின விழா, ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் துவக்கவிழா மற்றும் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமையாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்து, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, 21 பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கி கலெக்டர் மகேஸ்வரன் பேசியதாவது: சமுதாயத்தில், ஆசிரியர், நல்லாசிரியர் என்ற பதவி ஒவ்வொருவரின் சாதனை மூலம் கிடைப்பதாகும். ஆசிரியர்கள், சமுதாயத்தால் மதிக்கக்கூடியவர்கள். ஆசிரியர் பதவி எல்லா பதவிகளுக்கும் மேலானது. மாதா, பிதா, குரு, தெய்வம், என்ற வரிசையில் கடவுளுக்கு நிகராக போற்றக்கூடியவர்கள் ஆசிரியர்கள். தரமான கல்வி, தரமான ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. சமூகத்தில் ஆசிரியர்கள் முன்மாதிரியாக விளங்கவேண்டும். நாட்டின் நம்பிக்கையாக திகழும் மாணவ செல்வங்களுக்கு, முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை செம்மைபடுத்த வேண்டும். நல்ல குடிமகன்களாக உருவாக்குவதும் ஆசிரியர்களின் கடமை. சிறந்த மாணவர்களை உருவாக்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதை, 11 ஆசிரியர்கள் பெற்றுள்ளனர். வரும் கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளும் மிக அதிக அளவில் தேர்ச்சி விகிதத்தை பெறுவதோடு, கிருஷ்ணகிரி மாவட்டம், கல்வியில் முதல் மாவட்டமாக திகழ வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். சென்னை ஒன்வோர்ல்டு அகாடமி நிறுவனம் சார்பில், புதிய முறையில் ஆசிரியர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சியை பயிற்சியாளர் ராதிகா, ஒருங்கிணைப்பாளர் சொப்னா, யூத் எக்ஸ்னோரா தலைவர் பிரீத்தம் அலெக்ஸ் ஆகியோர் வழங்கினார். விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ் நன்றி கூறினார்.