/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
யானை மீது விநாயகர் ஊர்வலம்: 169 விநாயகர் சிலைகள் கரைப்பு
/
யானை மீது விநாயகர் ஊர்வலம்: 169 விநாயகர் சிலைகள் கரைப்பு
யானை மீது விநாயகர் ஊர்வலம்: 169 விநாயகர் சிலைகள் கரைப்பு
யானை மீது விநாயகர் ஊர்வலம்: 169 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED : செப் 05, 2011 11:55 PM
ஓசூர்: ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில், 169 விநாயகர் சிலைகள் ஏரி, குளம் மற்றும் ஒகேனக்கல் ஆற்றில் கரைக்கப்பட்டன.
சூளகிரியில், அலங்கரிக்கப்பட்ட யானை மீது விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று சின்னாறு அணையில் கரைத்தனர். ஓசூர், சூளகிரி மற்றும் தேன்கனிக்கோட்டையில், விநாயகர் சதூர்த்தியையொட்டி பொதுமக்கள், ஹிந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சார்பில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிலைகளை தற்போது, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைத்து வருகின்றனர். ஓசூர் பகுதியில், நேற்று முன்தினம், 30க்கும் மேற்பட்ட சிலைகளை பொதுமக்கள், நீர்நிலைகளில் கரைத்தனர். நேற்று, 42 சிலைகள் நீர், நிலைகளில் கரைக்கப்பட்டன. சூளகிரியில், பத்து சிலைகள் சின்னாறு அணையில் கரைக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானையில், விநாயகர் சிலையை முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அணையில் கரைத்தனர். பேரிகையில், பத்த சிலைகளையும், பாலூரில் 18 சிலைகளையும், ஹட்கோவில் 4 சிலைகளையும் பொதுமக்கள், இளைஞர் ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகில் உள்ள ஏரி, குளங்களில் கரைத்தனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவில், நேற்று ஓரே நாளில், 169 விநாயகர் சிலைகளை கரைக்கப்பட்டது. மதகொண்டப்பள்ளியில், 10 சிலைகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கவுரம்மா ஏரியில் கரைத்தனர். இங்கு கடந்த காலங்களில், விநாயகர் சதூர்த்தியையொட்டி பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டதால், நேற்று ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., சுஹாசினி ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தளியில், 30 சிலைகள் பெரிய ஏரியில் கரைக்கப்பட்டது. உத்தனப்பள்ளியில், 39 சிலைகளும், ராயக்கோட்டையில், 40 சிலைகளும் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டது. கெலமங்கலத்தில், 32 சிலைகளை பொதுமக்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று, பட்டாளம்மன் ஏரியில் கரைத்தனர். அஞ்செட்டி, 17 சிலைகளை இளைஞர்கள் லாரி, டிராக்டர் உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எடுத்துச் சென்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைத்தனர். ஓசூர் டவுனில் விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து முன்னணி மற்றும் பல்வேறு இளைஞர் அமைப்புகள் சார்பில், 113 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள், 11ம் தேதி புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.