sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கதர் துணி விற்பனை இலக்கு ரூ. 40 லட்சம்

/

கதர் துணி விற்பனை இலக்கு ரூ. 40 லட்சம்

கதர் துணி விற்பனை இலக்கு ரூ. 40 லட்சம்

கதர் துணி விற்பனை இலக்கு ரூ. 40 லட்சம்


ADDED : அக் 03, 2011 03:22 AM

Google News

ADDED : அக் 03, 2011 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி, 40 லட்ச ரூபாய்க்கு, கதர் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காந்தியடிகளின் பிறந்த நாளான நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனை தெடக்க விழா மற்றும் காந்தியடிகள் பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி நகராட்சி வளாகத்தில் நடந்தது.

கலெக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்து கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்து பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி ஓசூர் ஆகிய இரண்டு கதர் அங்காடி மற்றும் காவேரிப்பட்டணத்தில் சோப்பு அலகு செயல்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீபவாளி விற்னையாக, 35 லட்ச ரூபாய் விற்பனை குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 30 லட்ச ரூபாயுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளி விற்பனை குறியீடாக, 40 லட்ச ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தமிழ்நாடு அரசு மற்றும் மும்பை கதர் ஆணைக்குழு ஆகியவைகள் விழாக்கால சிறப்பு தள்ளுபடி வழங்கியுள்ளது. இதன் படி கதர் ரகங்களுக்கு, 30 சதவீதமும், பட்டு ரகங்களுக்கு, 20 சதவீதமும், பாலியஸ்டர் ரகத்துக்கு, 30 சதவீதமும், கம்பளிக்கு, 15 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடியினை பயன்படுத்தி இந்த ஆண்டு விற்பனை குறியீட்டை எய்திடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பர்கூர், சூளகிரி, தளி, கெலமங்கலம், ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிகமாக கதர் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்க்பபட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை ஊழியர்களுக்கு தேவையான கதர், பட்டு, கம்பளி, பாலியஸ்டர் ரகங்கள் கடன் விற்பனை சலுகை வழங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து அரசு பணியாளர்களும் கதர் துணி வகைகளை கொள்முதல் செய்து கதர் விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் காவேரிப்பட்டணத்தில் டிட்டர்ஜெண்ட சோப்பு உற்பத்தி அலகு ஒன்று செயல்படுகிறது. இந்த அலகில் ஆண்டுக்கு, 60 மெட்ரிக் டன் சலவை சோப்பு உற்பத்தி செய்யப்பட்டு பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலமாகவும், கதர் அங்காடிகள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையில் அனைவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி, ஏழை, நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்கள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

விழாவில், ஆர்.டி.ஓ., சதீஸ், சேலம் மண்டல கதர் கிராமத் தொழில் கண்காணிப்பாளர் ஆனந்தன், நகராட்சி கமிஷனர் லோகநாதன், சுகாதார ஆய்வாளர் மோகனசுந்தரம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








      Dinamalar
      Follow us