sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி அருகே கட்டாய திருமணத்தால் மாயமான மாணவி மீட்பு

/

கிருஷ்ணகிரி அருகே கட்டாய திருமணத்தால் மாயமான மாணவி மீட்பு

கிருஷ்ணகிரி அருகே கட்டாய திருமணத்தால் மாயமான மாணவி மீட்பு

கிருஷ்ணகிரி அருகே கட்டாய திருமணத்தால் மாயமான மாணவி மீட்பு


ADDED : அக் 03, 2011 03:22 AM

Google News

ADDED : அக் 03, 2011 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே திருமணத்துக்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்ததால், அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி மாயமானார்.

போலீஸார் விசாரித்து, தோழி வீட்டில் தங்கியிருந்த மாணவியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தேவன். இவரது மகள் ரஞ்சனி(17). இவர் ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்ளப்ளியில் ப்ளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் ரஞ்சனிக்கும் அவரது உறவுகாரர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் தான் தான் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்கபோவதாக கூறி ரஞ்சனி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளும்படி பெற்றோர்கள் ரஞ்சனியை வற்புறுத்தியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த ரஞ்சனி கடந்த 28ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திடீரென்று மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் ரஞ்சனி கிடைக்காதால் தேவன் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸில் புகார் செய்தார். ரஞ்சனியை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் எல்லப்பன் மேற்பார்வையில், எஸ்.ஐ., மாதேஸ்வரி மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டத்தில், படிக்கும் வயதில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாததால் ரஞ்சனி திருவண்ணாமலை மாவட்டம் கருப்பூரில் உள்ள தனது தோழி சரண்யா வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, கருப்பூர் சென்ற தனிப்படை போலீஸார் ரஞ்சனியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ரஞ்சனிக்கு 17 வயதே ஆவதால், அவருக்கு தற்போது திருமணம் செய்யகூடாது, என்றும் போலீஸார் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.








      Dinamalar
      Follow us