ADDED : மே 11, 2026 03:27 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி வரலாறு' குறித்து நடந்த சிறப்பு திறனறி தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து, பள்ளி மாணவர்களிடம் வர-லாற்று ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'கிருஷ்ணகிரி வர-லாறு' குறித்த சிறப்பு திறனறி தேர்வை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் நேற்று நடத்தினர். வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவை துவங்க காரணமாக இருந்த புரவலர் கிருஷ்ணாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த இப்-போட்டியில், 8 முதல், 12-ம் வகுப்பு வரை பயிலும், 35 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு, கிருஷ்ணகிரி வரலாறு குறித்த கொள்குறி வகை வினாக்கள் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டு, ஒரு மணி நேரம் நடந்த தேர்வில், முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற யஸ்-மிதா, நவனித், சாதனா ஆகியோருக்கு, புரவலர் கிருஷ்ணாஜியின் மனைவி சரோஜா பாய், ரொக்கப்பரிசு மற்றும் நினைவு கேடயம் வழங்கி பாராட்டினார். தேர்வில் பங்கேற்ற அனைவருக்கும்
சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வா-கிகள் ரங்கப்பன், ஜெயா ஆரோக்கியசாமி, திம்மராயன் டேவிஸ், மாதப்பன், பாலாஜி, டெய்சி, தமிழ்செல்வன், காப்பாட்சியர் சிவ-குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார், பெருமாள் ஆகியோர்
செய்திருந்தனர்.
