/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு 3வது முறையாக நீர்வரத்து 'பூஜ்யம்'
/
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு 3வது முறையாக நீர்வரத்து 'பூஜ்யம்'
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு 3வது முறையாக நீர்வரத்து 'பூஜ்யம்'
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு 3வது முறையாக நீர்வரத்து 'பூஜ்யம்'
ADDED : ஏப் 01, 2024 04:08 AM
கிருஷ்ணகிரி: இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டின் இறுதியில், 4 மாதங்கள் பரவலாக மழை பெய்து, கே.ஆர்.பி., அணைக்கு தொடர்ந்து நீர்வரத்தால், அணை நீர்மட்டம், 248 நாட்களாக தொடர்ந்து, 50 அடிக்கு மேல் நீர் இருப்பு இருந்தது. பின்னர் மழையின்றி நீர்வரத்து வேகமாக குறைந்து வந்தது. கடந்த பிப்., 8ல் அணைக்கு வினாடிக்கு, 32 கன அடி நீர்வரத்தான நிலையில், கடந்த, 9ல் இந்த ஆண்டில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. பின்னர், 10 நாட்கள் அணைக்கு தண்ணீர் வந்த நிலையில், கடந்த மாதம், 23ல், 2வது முறையாக மீண்டும் நீர்வரத்து முற்றிலும் நின்றது. கடந்த, 26 முதல் நீர்வரத்து இருந்த நிலையில், இந்த ஆண்டில், 3வது முறையாக நேற்று, அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. அணையிலிருந்து வலது மற்றும் இடது புற வாய்க்கால் மூலம், 143 கன அடிநீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 43.75 அடியாக நீர்மட்டம் இருந்தது.
மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவுவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் பல இடங்களில் தண்ணீரின்றி பாறையாக காட்சியளிக்கிறது.

