/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி 2.23 லட்சம் பேர் கண்டுகளிப்பு
/
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி 2.23 லட்சம் பேர் கண்டுகளிப்பு
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி 2.23 லட்சம் பேர் கண்டுகளிப்பு
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சி 2.23 லட்சம் பேர் கண்டுகளிப்பு
ADDED : ஜூலை 22, 2025 01:42 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் நடந்த, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை, 2.23 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நிறைவுவிழா நடந்தது. 'மா' போட்டியில் வெற்றி பெற்ற விவசாயிகள், சிறந்த அரங்குகள் அமைத்த அரசுத்துறைகள், நாய், சமையல் கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, 66 பேருக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி பேசியதாவது:
கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே உள்ள திடலில், 31-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கடந்த மாதம், 21-ம் தேதி முதல் நேற்று முன்தினம், 20-ம் தேதி வரை, 30 நாட்கள் நடந்தது. 30 நாட்கள் நடந்த இக்கண்காட்சியை நாள்தோறும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள் என மொத்தம், 2.23 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
துணை கலெக்டர் (பயிற்சி) க்ரிதி காம்னா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.