/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவ முகாம் நடத்திய போலி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது
/
மருத்துவ முகாம் நடத்திய போலி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது
மருத்துவ முகாம் நடத்திய போலி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது
மருத்துவ முகாம் நடத்திய போலி டாக்டர் உள்ளிட்ட 4 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
ஓசூர் : ஓசூர் அருகே மருத்துவ முகாம் நடத்திய கோவையை சேர்ந்த போலி டாக்டர், மூன்று மருத்துவ பணியாளர்களை கர்நாடகா போலீஸார் கைது செய்துள்ளனர். ஓசூர் அருகே கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி முத்த நல்லூரியில் சிலர் போலியாக மருத்துவமனை நடத்தி வருவதாகவும், அவ்வப்போது கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தி மோசடி செய்து வருவதாக புகார் எழுந்தது. தகவல் அறிந்த ஆணைக்கல் தாலுகா சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் குமார் அத்திப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதையடுத்து எஸ்.ஐ., விருபாக்சமி மற்றும் போலீஸார் முத்தநல்லூரியில் சென்று சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்திய நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையைத்தை சேர்ந்தவர் விவேக் (25). அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சசிக்குமார் (36), சிவக்குமார் (37), ஜேம்ஸ் (29) என தெரிந்தது. இவற்றில் விவேக் மருத்துவ கவுன்சில் அனுமதி பெறாமல் மருத்துவராக நடித்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தாகவும், மற்ற மூவரும் மருத்துவ பணியாளர்களாக பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது. நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். கைதானவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப், மருத்துவ கருவிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த போலி மருத்துவ குழுவினர் இதே போல், ஓசூர், அத்திப்பள்ளி, கோவை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போலி மருத்துவ முகாம்கள் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்தது.