/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி அ.தி.மு.க.,வினர் உள்ளிருப்பு போராட்டம்
/
நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி அ.தி.மு.க.,வினர் உள்ளிருப்பு போராட்டம்
நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி அ.தி.மு.க.,வினர் உள்ளிருப்பு போராட்டம்
நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி அ.தி.மு.க.,வினர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 29, 2011 11:33 PM
ஓசூர்: ஓசூர் நகராட்சி தலைவர் பதவி விலகக் கோரி, நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.,வினர் கடும் ரகளையில் ஈடுப்பட்டதால், கூட்டம் துவங்கிய ஐந்து நிமிடத்தில் தலைவருடன் தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
அதிருப்தியடைந்த அ.தி.மு.க.,வினர் நகராட்சி அலுவலகத்தில் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஓசூர் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன் தலைமையில் நேற்று மாலை நடந்தது. கமிஷனர் விமலா முன்னிலை வகித்தார்.நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன்(தி.மு.க.,): நகரில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.சிவக்குமார்(அ.தி.மு.க.,): நகராட்சி தலைவராக பொறுப்பு வகிக்கும் மாதேஸ்வரன், கடந்த நகராட்சி நிர்வாகத்தில் தனது மாஜி மனைவி கலைவாணியை ஒப்பந்ததாரராக பதிவு செய்து, அவரது பெயரில் உள்ள 'ö'கை போலி கையேழுத்து போட்டு மோசடி செய்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோப்புகள் மாயமானதாக கூறி மாதேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி 'ö'மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய மாதேஸ்வரன் நகராட்சி தலைவர் பதவியில் நீடிக்க எந்த அருகதையும் இல்லை.நகராட்சி தலைவர்: சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளியாக உள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைவியாக கொண்ட கட்சியில் உறுப்பினராக உள்ள நீங்கள், அதை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. சம்
பந்தமில்லாத பிரச்சனையை பேசி அரசியல் விளம்பரம் தேட வேண்டாம்.அதன்பின் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்தில், கடும் ரகளையில் ஈடுப்பட்டதால் பயங்கர கூச்சல் குழப்பம் உருவானது. இதனால், நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், கூட்டம் முடிந்ததாக அறிவித்துவிட்டு தி.மு.க., கவுன்சிலர்களுடன் வெளியேறினார். ஆவேசமடைந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சிவக்குமார், தவமணி, லோகநாதன் ஆகியோர் தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கமிஷ்னர் அவர்களை சமாதானம் செய்ததால் மாலை 5.15 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.நகராட்சி தலைவர்(பொ) மாதேஸ்வரன், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கடந்த ஏழு, எட்டு ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தில் எனக்கும், நகராட்சிக்கும் ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு வெற்றி பெற்றது. அதன்பின் கவுன்சிலராக, துணைத்தலைவராக பல ஆண்டுகள் மக்கள் பணி செய்துள்ளேன். என் மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு கூறி அ.தி.மு.க., வில் பெரிய ஆளாக சிவக்குமார் சுய அரசியல் விளம்பரம் தேடுகிறார். எள்ளவும் உண்மையில்லாத குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.