sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

/

தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

தனியார் கல்லூரி பஸ்ஸை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு


ADDED : ஆக 21, 2011 02:29 AM

Google News

ADDED : ஆக 21, 2011 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில் தனியார் கல்லூரி பஸ்சை வழிமறித்து, தொழிற்சாலை தொழிலாளர்கள் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர்.

கல்லூரி பஸ்சை மறித்ததால் மாணவ, மாணவிகளும் தொழிலாளர்களுக்கு போட்டியாக போராட்டத்தில் ஈடுப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் எம்.ஜி.ஆர்., நகர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரிக்கு சொந்தமான பஸ் மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு ஓசூரில் இருந்து கல்லூரி நோக்கி சென்றது. பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே வந்த போது, பஸ்சுக்கு முன் அசோக்லேலேண்ட் தொழிலாளி சென்ற பைக்கை ஹாரன் அடித்தப்படி கல்லூரி பஸ் வேகமாக கடந்து சென்றது. ஹாரன் அடித்து வேகமாக சென்றதால் ஆவேசமடைந்த அந்த தொழிலாளி, பஸ்ஸை ஓவர் டேக் செய்து பஸ்சை நிறுத்தி டிரைவரை சத்தம் போட்டார். இரு தரப்பினருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.



தொழிலாளிக்கு ஆதரவாக அவருடன் வேலைபார்க்கும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பஸ்சை வழிமறித்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்த ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார், தொழிலாளர்களை கைது செய்வதாக எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீஸார் விரட்டியடித்தனர். இதற்கிடையில், ஓசூர் பஸ்ஸ்டாண்ட் அருகே கல்லூரி பஸ்ஸுக்காக காத்து நின்ற மாணவ, மாணவிகள் போக்குவரத்து ஸ்தம்பிப்பால் பஸ்சை மறித்த தனியார் தொழிலாளர்களை கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால், பஸ்ஸ்டாண்ட் அருகேயும் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸார் மாணவர்களை சமாதானம் செய்து பஸ்ஸை வரவழைத்து கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஹட்கோ போலீஸார், கல்லூரி பஸ்சை வழிமறித்து மறியலில் ரகளையில் ஈடுப்பட்டதாக கூறி அசோக்லேலேண்ட் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.








      Dinamalar
      Follow us