/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதவையை கர்ப்பிணியாக்கிய வாலிபர் அதிரடி கைது
/
விதவையை கர்ப்பிணியாக்கிய வாலிபர் அதிரடி கைது
ADDED : ஆக 29, 2011 11:52 PM
மத்தூர்: மத்தூர் அருகே கள்ளக்காதலியை கர்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வாலிபரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
மத்தூரை அடுத்த சாளூரை சேர்ந்தவர் சக்திவேல் (25). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதே கம்பெனியில் திருபூரை சேர்ந்த லட்சுமி (26) என்பவரும் வேலை பார்த்துள்ளார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி ஆண் குழந்தை உள்ளது. கணவர் இறந்து விட்டார். சக்திவேலுக்கும், முத்துலட்சுமிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. முத்துலட்சுமியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சக்திவேல் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.
தற்போது, முத்துலட்சுமி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். கர்ப்பத்தை காரணம் காட்டி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி முத்துலட்சுமி சக்திவேலிடம் கேட்டுள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள சக்திவேல் மறுத்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன் யாருக்கும் தெரியாமல் சக்திவேல் திருப்பூரில் இருந்து சொந்த ஊரான சாளூருக்கு வந்துவிட்டார். முத்துலட்சுமி திருப்பூர் போலீஸில் புகார் செய்தார். திருப்பூர் போலீஸார் மத்தூருக்கு வந்து உள்ளூர் போலீஸார் உதவியுடன் சாளூருக்கு சென்று சக்திவேலை கைது செய்து விசாரணைக்காக திருப்பூர் அழைத்து சென்றனர்.