sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

புதையல் எடுக்க அக்னி பூஜை

/

புதையல் எடுக்க அக்னி பூஜை

புதையல் எடுக்க அக்னி பூஜை

புதையல் எடுக்க அக்னி பூஜை


ADDED : அக் 05, 2011 01:01 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி மலைக்கு பின்புறம் புதையலுக்காக நள்ளிரவு மர்ம நபர்கள் அக்னி குண்டம் எழுப்பி பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூளகிரியில் கடந்த காலத்தில் பல்வேறு இடங்களில் புதையல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனால், ஏராளமானோர் புதையல் ஆசையில் அவ்வப்போது பூமியை தோண்டி பூஜை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சூளகிரி மலையடிவாரத்தில் யாரோ மர்கள் அக்னி குண்டம் எழுப்பி எலுமிச்சை பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்துள்ளனர்.

நள்ளிரவு மலையடிவாரத்தில் தீ தெரிந்ததால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று விசாரித்தனர். பொதுமக்களை கண்டதும், பூஜை செய்த அந்த கும்பல் தப்பி சென்றது. மர்ம நபர்கள் ஓடும்போது பூஜை பொருட்களை எடுத்து சென்றனர்.இதனால், அப்பகுதியில் எலுமிச்சை, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் சிதறி கிடந்தது. அவர்கள் புதையலுக்காக பூஜை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. சூளகிரி பகுதியில் அடிக்கடி இதுபோல் புதையலுக்காக மர்ம நபர்கள் நள்ளிரவு பூஜைகள் நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us