/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாஸ்ட் புட், டீக்கடைகளில் கலப்படம் கண்டு கொள்ளாத கிருஷ்ணகிரி அதிகாரிகள்

ADDED : நவ 09, 2024 01:21 AM
கிருஷ்ணகிரி, நவ. 9-
கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பாஸ்ட் புட், டீக்கடைகளில், கலப்படங்களுடன் உணவுப்பொருட்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி நகர் மற்றும் சுற்றுப்புறங்களில், சாலையோர பாஸ்ட் புட் கடைகள் ஏராளமாக உள்ளன. ஆனால் பலவற்றிற்கு அனுமதி பெறுவது இல்லை. மேலும், பாஸ்ட் புட் கடைகளில் போடப்படும் சிக்கன்களில், வண்ணம் வருவதற்காக ரசாயனம் கலந்த பவுடர்களை உபயோகிப்பதாகவும், இதை சாப்பிடுவதால் வயிறு உபாதையுடன், உடல் நலக்கேடும் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் டீத்துாளுக்கு பதில், கலர் பவுடருடன் கூடிய பொருட்களை கலந்து விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்துவதில்லை. தீபாவளி நேரத்தில் கூட ஓட்டல்கள், பலகார கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.