/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'கிருஷ்ணகிரி ரயில் அறிவிப்பு 2 மாதத்தில் வெளியாகும்'
/
'கிருஷ்ணகிரி ரயில் அறிவிப்பு 2 மாதத்தில் வெளியாகும்'
'கிருஷ்ணகிரி ரயில் அறிவிப்பு 2 மாதத்தில் வெளியாகும்'
'கிருஷ்ணகிரி ரயில் அறிவிப்பு 2 மாதத்தில் வெளியாகும்'
ADDED : ஏப் 16, 2024 07:06 AM
கிருஷ்ணகிரி : லோக்சபா தேர்தல் முடிந்து, 2 மாதத்தில், கிருஷ்ணகிரி ரயில் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என, கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் கூறினார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி, பா.ஜ., மாவட்ட தலைவர்கள் சிவபிரகாஷ், நாகராஜ் ஆகியோர் தலைமை வகித்தார். ஓ.பி.எஸ்., அணி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், பா.ம.க., மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நரசிம்மன் தேர்தல் வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: பா.ஜ., வலிமையான கூட்டணியுடன், தமிழகத்தில் லோக்சபா தேர்தலை சந்திக்கிறது. மத்தியில் பா.ஜ., ஆட்சி அமையும் போது, அதில் கிருஷ்ணகிரி, பா.ஜ., தொகுதியும் இருக்கும். அதன்பின், 36,000 கோடி ரூபாய் மதிப்பில், பொறியியல், அக்ரோ, சோலார் பேனல், பேட்டரி மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். விவசாய பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருட்கள், மாங்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலையும் உருவாகும். விவசாய பொருட்கள் பாதுகாப்பு ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்படும்.
கடந்த, 1996ல், நான் எம்.பி.,யாக இருந்தபோது கிருஷ்ணகிரி ரயில் திட்டத்திற்கான சர்வே நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் வெற்றி பெற்று, கிருஷ்ணகிரிக்கு ரயில் திட்டத்தை கொண்டு வருவேன். தேர்தல் முடிந்து, அடுத்த, 2 மாதத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்.லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதற்கு தடையாக இருக்கும், திராவிட கட்சி ஆட்சிகளை ஒழித்து, 2026ல் தமிழகத்திலும், பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.

