/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுமக்கள் போராட்டம் போலீஸாரை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி
/
பொதுமக்கள் போராட்டம் போலீஸாரை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி
பொதுமக்கள் போராட்டம் போலீஸாரை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி
பொதுமக்கள் போராட்டம் போலீஸாரை கண்டித்து வீடுகளில் கருப்புகொடி
ADDED : செப் 12, 2011 02:26 AM
கிருஷ்ணகிரி: விநாயகர் சிலையை மீண்டும் பூஜைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்துச்
செல்ல அனுமதி வழங்காத போலீஸாரை கண்டித்து, காவேரிப்பட்டணம் அடுத்த
அகரத்தில் நேற்று, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி
எதிர்ப்பை தெரிவித்தனர்.காவேரிப்பட்டணம் அடுத்துள்ள அகரத்தில், கடந்த 1ம்
தேதி விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்தனர். இந்த சிலையை விசர்ஜனம் செய்ய
கடந்த, 6ம் தேதி ஊர்வலமாக பொதுமக்கள் எடுத்துச் சென்றனர்.அகரம் கூட்ரோடில்
உள்ள மசூதியை கடந்து செல்ல முயன்ற போது, போலீஸாருக்கும் ஊர்வலத்தில்
வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள்,
விநாயகர் சிலையை நடு ரோடில் வைத்து விட்டு சென்று விட்டனர். அந்த சிலையை
போலீஸாரே எடுத்துச் சென்று ஆற்றில் விசர்ஜனம் செய்தனர்.அகரத்தை சேர்ந்த
பொதுமக்கள், மீண்டும் விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்துச்
சென்று விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று போலீஸாரிடம் அனுமதி கோரினர்.
அகரத்தில், மீண்டும் விநாயகர் சிலையை வைக்க போலீஸார் அனுமதி வழங்கவில்லை.
இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு பர்கூர் டி.எஸ்.பி., திவேல்
தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், தினகரன், காசிநாதன் மற்றும்
நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் அகரத்தில் பாதுகாப்பு பணிகளை
மேற்கொண்டுள்ளனர். விநாயகர் சிலையை மீண்டும் பூஜைக்கு வைக்க அனுமதி மறுத்த
போலீஸாரை கண்டித்து, கடந்த 9ம் தேதி அகரத்தில் கடையடைப்பு போராட்டம்
நடந்தது. நேற்று போலீஸாரை கண்டித்து, வீடுகளில் கருப்பு கொடி கட்டி
எதிர்ப்பை தெரிவித்தனர்.தொடர்ந்து, அகரத்தில் பதட்டம் நிலவி வருவதால்,
போச்சம்பள்ளி தாசில்தார் பட்டம்மாள் மற்றும் போலீஸார் அங்கு பாதுகாப்பு
பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.