sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

/

கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்

கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம்


ADDED : ஆக 21, 2025 01:55 AM

Google News

ADDED : ஆக 21, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியில், கே.ஆர்.பி., அணை இடதுபுற கால்வாய் பாசன விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. சங்க ஆலோசகர் கண்ணையா தலைமை வகித்தார். வரதராஜ் முன்னிலை வகித்தார். அனுமந்தராஜ் வரவேற்றார். தமிழக விவசாயிகள் சங்க, மாநிலத்தலைவர் ராமகவுண்டர் பேசினார்.

கூட்டத்தில், இடதுபுற கால்வாய், மழை, வெள்ளத்தால் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதனால், கடைகோடி வரை பாசனத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. இது குறித்து, கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளரிடம் கடந்த, 3 ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. பொதுப்பணித்துறை திட்டமிட்டு வாணிஒட்டு திட்டத்தை முடக்கி வைத்துள்ளது. எனவே, மறுபரிசீலனை செய்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அனைத்து பாசன கால்வாயையும் அகல, ஆழப்படுத்தி அதிகளவு தண்ணீர் வழங்க வேண்டும். கே.ஆர்.பி., அணை கால்வாய் தற்போது, 150 கன அடி மட்டுமே நீர் கடத்துகிறது. இதை, 280 கன அடி நீர் கடத்தும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். கே.ஆர்.பி., அணை கட்டியபோது, 9,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்ற நிலையில், தற்போது, 25,000 ஏக்கராக பாசனப்பரப்பு அதிகரித்துள்ளதால், ஆயக்கட்டு பகுதியாக மாற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 26ல் கே.ஆர்.பி., அணை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us