/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மது பாராக மாறி வரும் கே.ஆர்.பி., அணை; புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்
/
மது பாராக மாறி வரும் கே.ஆர்.பி., அணை; புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்
மது பாராக மாறி வரும் கே.ஆர்.பி., அணை; புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்
மது பாராக மாறி வரும் கே.ஆர்.பி., அணை; புகார் தெரிவித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்
ADDED : டிச 06, 2024 07:55 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, தர்மபுரி, திருப்பத்துார் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இம்மாவட்ட மக்களின் ஒரே பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது கே.ஆர்.பி., அணை. இது தற்போது மது குடிக்கும் பாராக மாறி வருகிறது. அணை பூங்கா, நீர்திறப்பு பகுதி, இடது மற்றும் வலதுபுற கால்வாய் என, அனைத்து பகுதிகளிலும் குடிமகன்கள் பலர் தினமும் மது குடித்து விட்டு, பாட்டில்களையும், பிளாஸ்டிக் டம்ளர்களையும் வீசிச் செல்கின்றனர். இவை திரும்பிய பக்கமெல்லாம் சிதறி கிடப்பதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் படி உள்ளது. இது குறித்து, பொதுப்பணித்துறை அலுவலர்கள், பல முறை புகார் தெரிவித்தும், போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
இது குறித்து, சுற்றுலா பயணிகள் கூறியதாவது: விடுமுறை நாட்களில் பொழுதை போக்கவும், மன நிம்மதிக்காகவும் இதுபோன்ற சுற்றுலா தளங்களுக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் கே.ஆர்.பி., அணையில் எங்கு பார்த்தாலும், மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் குவிந்துள்ளன. பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கும் இடங்களில், காலி மது பாட்டில்களை வீசி சென்றுள்ளனர். இதனால் குடும்பத்துடன் இங்கு வந்து பொழுதை போக்க முடியவில்லை. அணை பூங்கா மற்றும் பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்த முடியா விட்டாலும், இருப்பதை பராமரித்து சுத்தமாக வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.