நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி
மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அயிலம்பட்டி கிராமத்தில், பழமையான
விநாயகர், மாரியம்மன் கோவில்களில், நேற்று காலை 3ம் கால வேள்வியுடன்
தொடங்கி, வேள்வி நிறைவு பெற்று, யாகசாலையில் வைத்த கலச குடங்களுடன்
பிரகார வலம் வந்து, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி
கும்பாபிஷேகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து
கொண்டனர்.
அதேபோல் போச்சம்பள்ளி அடுத்த, கூச்சானுார் மோட்டூர்
கிராமத்தில், சின்னமாரியம்மன் கோவிலில் நேற்று காலை, 2ம் கால யாக
பூஜை, ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் சின்னமாரியம்மன் கோவில் கோபுர
கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில்,
700க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

