/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம்
/
உழைப்பாளர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மே 02, 2025 01:55 AM
ராயக்கோட்டை:
ஓசூரில், தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில், தொழிலாளர் தினத்தையொட்டி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மாநகர மேயர் சத்யா ஆகியோர், தொ.மு.ச., கொடியேற்றி, தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினர். மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, தொ.மு.ச., கவுன்சில் செயலாளர் கோபாலகிருஷ்ணன். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில், ஆட்டோ டிரைவர்கள், சுமை துாக்கும் தொழிலாளர்களுக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் இனிப்பு வழங்கினர். மாவட்ட பொருளாளர் மல்லையன், கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* காவேரிப்பட்டணம் டவுன் பஞ்., சார்பில், தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில் கேக் வெட்டி, துாய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
* ஓசூர் அன்பு கரங்கள் அறக்கட்டளை மற்றும் உதிரம் தன்னார்வ ரத்த கொடை அமைப்பு சார்பில், ராயக்கோட்டை சாலையிலுள்ள முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 21ம் ஆண்டு ரத்த தான முகாம் நேற்று நடந்தது. இதில் மொத்தம், 451 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டன.
* ஊத்தங்கரை ரவுண்டானாவில், இ.கம்யூ., சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. நகர செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார்.