ADDED : நவ 05, 2026 02:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன், சுமை துாக்குவோர், மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.முற்றுகை போராட்டத்தில், சங்க அங்கீகார தேர்தலை உடனே நடத்த வேண்டும். கடந்த, 2025 ஜூலை, 12க்கு முன் தேதியிட்டு நிலுவையிலுள்ள, 60 சதவீதம் கூலி உயர்வை உடனே வழங்க வேண்டும்.
வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும். கடந்த, 2022க்கு முன்தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும். ஆதார் இணைப்பில் நிர்வாகம் செய்த தவறுகளை நிர்வாகமே சரிசெய்ய வேண்டும். தொழிலாளர்களின் கூலியை கொள்ளையடித்த கள்ளக்குறிச்சி மண்டலத்தில் சில அலுவலர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
* தர்மபுரியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன், டி.என்.சி.எஸ்.சி., சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
