நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்தவர் சோனு மனைவி ஐஸ்வர்யா, 21. தனியார் நிறுவன ஊழியர்; இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ஒரு ஆண் குழந்தை உள்ளது. இரு மாதங்களுக்கு முன்பு, குடும்ப தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஐஸ்வர்யா திரும்பி வரவில்லை. அவரது தாய் ஆத்மா, 35, டவுன் போலீசில் கொடுத்த புகாரில், அருண் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.