/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
ஓசூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : ஜூன் 22, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:தமிழக
அரசு, உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற
வேண்டும்.
வக்கீல்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். புதிய
அமலாக்க சட்டத்தை நிறுத்த வேண்டும். குற்றவியல் சட்ட மாற்றங்களை
திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூரில் நேற்று
முன்தினம் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், நேற்று
ஓசூரில் பணியாற்றும், 420 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில்
ஈடுபட்டனர். தேன்கனிக்கோட்டையிலும் வக்கீல்கள் நீதிமன்ற
புறக்கணிப்பை மேற்கொண்டனர். அதனால், நீதிமன்ற பணிகள்
பாதிக்கப்பட்டன.