ADDED : மார் 28, 2026 05:49 AM

போச்சம்பள்ளி; தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், நிர்-வாகிகள் தேர்தல் வரும், 30ல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்-கரை நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்களுக்கு தனி-யாகவும், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் உள்ள வக்கீல்களுக்கு தனியாகவும், ஒவ்வொரு ஐந்-தாண்டுக்கு ஒரு முறை நடக்கும், பார் கவுன்சில் தேர்தலுக்கு பூத் அமைப்பது வழக்கம்.
இந்த நிலையில் போச்சம்பள்ளி நீதிமன்ற வளா-கத்தில் அமைக்கப்பட வேண்டிய பூத், ஊத்தங்க-ரையில் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. இதைய-டுத்து, போச்சம்பள்ளி வக்கீல்கள், 30க்கும் மேற்-பட்டோர் வழக்கம்போல் எங்களுக்கு, போச்சம்-பள்ளியில் பூத் அமைக்க வேண்டும் என கூறி, நேற்று போச்சம்பள்ளி நீதிமன்ற வளாகத்தின் எதிரில், தர்மபுரி திருப்பத்துார் சாலையில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
