/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டங்ஸ்டன் விவகாரத்தில் தன் பெயரை குறிப்பிட்டதால் முதல்வர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை; தம்பிதுரை
/
டங்ஸ்டன் விவகாரத்தில் தன் பெயரை குறிப்பிட்டதால் முதல்வர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை; தம்பிதுரை
டங்ஸ்டன் விவகாரத்தில் தன் பெயரை குறிப்பிட்டதால் முதல்வர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை; தம்பிதுரை
டங்ஸ்டன் விவகாரத்தில் தன் பெயரை குறிப்பிட்டதால் முதல்வர் ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை; தம்பிதுரை
ADDED : ஜன 13, 2025 02:24 AM
கிருஷ்ணகிரி: ''தமிழக சட்டசபையில் தன்னைப்பற்றி தவறாக பேசிய முதல்வர் ஸ்டாலின் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்,'' என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை கூறினார்.
எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், நேற்று நடந்தது. இதில் பங்-கேற்ற தம்பிதுரை கூறியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் என் பெயரை குறிப்-பிட்டு, டங்ஸ்டன் தொழிற்சாலை வர, தம்பிதுரை பேச்சுதான் காரணம் என பேசியுள்ளார். இதை நான் முழுமையாக மறுக்-கிறேன். மைன்ஸ் குறித்து சட்டம் போட மத்திய அரசுக்குதான் உரிமை கொடுத்துள்ளார்களே தவிர, நான் பேசி மத்திய அரசுக்கு, உரிமை போய் விட்டது என்பது தவறானது.
மாநிலங்களவையில் டெப்டி சேர்மன் பிரகலா ஜோஸ், டங்ஸ்டன் குறித்து பேச அனைவரையும் அழைக்கிறார். என்னையும் அழைத்தார். நான் பேசும்போது, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரி-வித்தனர். ஆனால், அவர்கள் யாரும் இதுகுறித்து எதிர்த்து பேச-வில்லை. நான் பேசும்போது, நெய்வேலி போராட்டம் நடக்கி-றது. எனவே விவசாய நிலங்களை எடுக்க வேண்டாம் என்றேன். அப்படி இருக்கும்போது, எப்படி டங்ஸ்டனுக்கு நிலம் எடுக்க சொல்வேன். டங்ஸ்டன் பற்றி நான் ஒரு வார்த்தை கூட பார்லி-மெண்டில் பேசவில்லை. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதே போல் ஸ்டாலின் ஆதாரம் காட்ட வேண்டும்.
கடந்த, 2023 டிச., 6ல் தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மத்திய அரசு எழுதிய கடிதத்தில், இதுபோன்ற ஒரு மினரல் உள்-ளது. ஏலம் விடலாமா என்று அனுமதி கேட்கின்றனர். இதற்கு பிப்., 8ல் மத்திய அரசுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில், தமிழக கனிம வளங்களை பட்டியலிட்டு, நாயக்கார்பட்டியிலுள்ள கனிம வளங்களையும் எடுக்க எதிர்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், நான் பேசியதால், டங்ஸ்டன் வந்து விட்டதாக எப்படி சொல்லலாம்?
இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தில், உரிமை மீறல் கடிதம் கொடுக்கவுள்ளேன். சட்டசபையில் நான் உறுப்பினராக இல்லாத நேரத்தில், என்னைப்பற்றி தவறான செய்தியை கொடுத்த முதல்வர் ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு தம்பிதுரை கூறினார்.