/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டை அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை
/
தேன்கனிக்கோட்டை அருகே நாயை கடித்து கொன்ற சிறுத்தை
ADDED : ஜூலை 11, 2025 01:10 AM
ஓசூர், :--தேன்கனிக்கோட்டை அருகே, ஊருக்குள் வந்த சிறுத்தை, நாயை கடித்து கொன்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் வனப்பகுதிகள் அதிகளவில் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உட்பட ஏராளமான விலங்குகள் உள்ளன. இதில், சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் வந்து ஆடு, கோழி மற்றும் நாய்களை கடித்து கொன்று செல்லும் சம்பவங்கள் நடக்கின்றன.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே உனுசேநத்தத்தில், சிறுத்தை நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். நேற்று காலை அப்பகுதியில் நாய் ஒன்றை, சிறுத்தை கடித்து கொன்று பாதியை தின்று விட்டு சென்றது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வனத்துறையினர் சென்று விசாரணை நடத்தி, சிறுத்தை நடமாட்டமுள்ள பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி, கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கவும், வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.