/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகாவிலிருந்து தமிழக எல்லையில் புகுந்த சிறுத்தை; 'சிசிடிவி' காட்சி வைரல்

ADDED : அக் 24, 2025 12:50 AM
கிருஷ்ணகிரி, கர்நாடக வனப்பகுதியிலிருந்து, தமிழக எல்லையில், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீட்டில் சிறுத்தை சுற்றித்திரியும் வீடியோ வெளியாகி
உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே மாநில எல்லையில் கும்மளாபுரம் வனப்பகுதி உள்ளது. இங்கு கர்நாடகா மாநில வனப்பகுதியிலிருந்து சிறுத்தைகள் இடம் பெயர்ந்துள்ளன. கும்ளாபுரம் வனப்பகுதியை ஒட்டிய, ஒரு பண்ணை வீட்டின் மீது, சிறுத்தை ஒன்று நள்ளிரவில் உலா வரும் வீடியோ காட்சிகள் அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனால், கும்மளாபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள தம்மாபுரம், கும்மாளம், ஜீகூர், தேவர்பெட்டா உள்ளிட்ட கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். உண்மையிலேயே தமிழக வனப்பகுதிக்குள் கர்நாடக மாநிலத்தில் இருந்து, சிறுத்தைகள் புகுந்துள்ளதா என, தமிழக வனத்துறையினர் உறுதி செய்து சிறுத்தைகளை பிடிக்க, நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.