தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரியில் சிறுத்தை நடமாட்டம்

கிருஷ்ணகிரியில் சிறுத்தை நடமாட்டம்

கிருஷ்ணகிரியில் சிறுத்தை நடமாட்டம்


ADDED : டிச 12, 2024 07:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 12, 2024 07:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்-தையால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அடுத்த ஜாகிர்வெங்கடாபுரம், குல்நகர், அதியமான் நகர், பாஞ்சாலியூர், கொண்டேப்பள்ளி, பையனப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ள-தாக தகவல் பரவியது.

நேற்று முன்தினம் இரவில் சிறுத்தை ஒன்று அதியமான் நகர் அருகே சென்றது அங்கிருந்த, 'சிசிடிவி'யில் பதிவாகியது. கிருஷ்-ணகிரி வனச்சரகர் முனியப்பன், வனவர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர், அதியமான்

நகரிலுள்ள வெற்றிச்செல்வன் என்பவரது வீட்டின், 'சிசிடிவி' காட்சியை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை ஒன்று வந்து சென்ற காட்சி பதிவாகி இருந்தது.வனச்சரக அலுவலர் முனியப்பன் கூறுகையில், ''அதியமான் நகரில் சிறுத்தை நடமாட்டம் தகவலால், இரவு முழுவதும் பட்-டாசுகள் வெடித்தும், சத்தம் எழுப்பியவாறு சிறுத்தையை தேடும் பணி நடந்தது. நேற்று காலை

சிறுத்தை யின் காலடித்தடம் உறுதி செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களாக சிறுத்தை யார் கண்ணிலும் தென்படவில்லை. பட்டாசு வெடித்தால், அங்கிருந்து இடம்பெ-யர்ந்து இருக்கலாம். கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளதால்

மக்கள் அச்சப்பட வேண்டாம். சிறுத்தை நடமாட்டத்தை கண்டால், உடனடியாக மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.சிறுத்தை நடமாட்டம் குறித்து வைரலானதால், ஜாகீர்வெங்கடா-புரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரை பள்ளி நேரத்தில் வகுப்பறை விட்டு வெளியே செல்ல ஆசிரியர்கள் தடை விதித்தனர். காலை, மாலையில்

மாணவ, மாணவியர் பாது-காப்பாக சென்று வர ஏதுவாக, உரிய நடவடிக்கைகளை, ஆசிரி-யர்கள் மேற்கொண்டனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கடந்த சில ஆண்டுக-ளாக நவ., டிச., மாதங்களில் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால், தெருவில் பீதியுடன் சென்று வருகிறோம். வனத்துறையினர் கண்காணிப்பை

தீவிரப்படுத்த வேண்டும்' என்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us