/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயியை கொன்ற 3 பேருக்கு ஆயுள்
/
விவசாயியை கொன்ற 3 பேருக்கு ஆயுள்
ADDED : ஜன 30, 2024 03:26 PM
ஓசூர் : தளி அருகே, பணத்திற்காக விவசாயயை கொன்ற, 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, ஓசூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 55, விவசாயி; இவர், கடந்த, 2017 ஜன., 30 ல் மாலை, 5:00 மணிக்கு அவரது வீட்டிற்கு வந்த பியாரகப்பள்ளியை சேர்ந்த லட்சுமிநாராயணன், 30, என்பவருடன், தன் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில் வெளியே சென்றார்.
தேவகானப்பள்ளி அருகே தைலதோப்பிற்குள் சென்றபோது, லட்சுமி நாராயணனின் நண்பர்களான பாரந்துார் பசவராஜ், 29, எஸ்.முதுகானப்பள்ளி சந்தோஷ்குமார், 29, இருந்தனர். அவர்கள் மூவரும், வெங்கடேசப்பாவிடம் செலவுக்கும், குடிப்பதற்கும் பணம் தர கேட்டனர். பணம் கொடுக்க மறுத்த வெங்கடேசப்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்த மூவரும், அவரது பாக்கெட்டில் இருந்த, 8,550 ரூபாயை எடுத்து கொண்டு தப்பினர். இக்கொலையில், அவர்கள் மூவரையும் தளி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, குற்றம்சாட்டப்பட்ட லட்சுமிநாராயணன், பசவராஜ், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 2,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜராகினார்.