ADDED : ஏப் 23, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
அஞ்செட்டி: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (ஏப்.23) இன்று நடக்கிறது. அதற்காக, மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் முதல் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில், கள்ளத்தனமாக மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என, போலீசார் தீவிர சோதனை நடத்தி வரு-கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த நாட்றாம்பாளையம் அருகே என்.புதுார் கிராமத்தில், மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக, அஞ்செட்டி போலீ-சாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார், தீவிர விசாரணை செய்தபோது, முருகன், 49, என்பவர் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்களை விற்பது தெரிந்தது. அதனால் அவரை கைது செய்த போலீசார், 104 பீர்பாட்டில்கள் மற்றும் 157 மது-பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
