/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருகப்பெருமான் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
முருகப்பெருமான் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
முருகப்பெருமான் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
முருகப்பெருமான் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : நவ 09, 2024 01:20 AM
ஓசூர், நவ. 9-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், முல்லை நகரில் உள்ள காயத்திரி அம்மன் கோவில் வளாகத்தில், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணிய சுவாமி சன்னதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது. 9:30 மணிக்கு சங்கடஹர விநாயகர் கோவில் சன்னதியில் இருந்து, சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதிக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, மாங்கல்யம், இனிப்பு வகைகள், பழங்கள், மாலை போன்ற, 50க்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளுடன் பெண்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர்.
மதியம், 12:00 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோவில் அர்ச்சகர் ஜெகநாத் ஆச்சர்யா, ரவிச்சந்திரன் ஆகியோர், திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 6:00 மணிக்கு மேல், முருகப்பெருமான் உற்சவர் திருவீதி உலா நடந்தது.
அதேபோல், ஓசூர் பெரியார் நகர் வேல்முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. நேற்று வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.