ADDED : மே 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, கீழ்செங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 40, இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு ஒண்டிமாவத்துார் பகுதி யில், நான்கு யூனிட் செம்மண் எடுத்து செல்லப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, வாகனத்தை சோதனை செய்ததில், அனுமதியின்றி செம்மண் கடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை பறிமுதல் செய்து, செங்கழனிபட்டியை சேர்ந்த டிரைவர் தங்கவேலை, 37, கைது செய்தனர்.