ADDED : ஏப் 07, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி வி.ஏ.ஓ., குப்த
வர்தணன் மற்றும் அலுவலர்கள், ராயக்கோட்டை சாலையில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்பகுதியில் நின்றிருந்த லாரியை சோதனை செய்ததில், மூன்று யூனிட் மணல் அனுமதி-யின்றி எடுத்து வந்தது தெரிந்தது. இதையடுத்து வி.ஏ.ஓ., அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் டிப்பர் லாரியை பறி-முதல் செய்தனர்.

