ADDED : ஜூன் 18, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்செட்டி, அஞ்செட்டி தாசில்தார் கோகுல்நாத் தலைமையில், வி.ஏ.ஓ., ரகுநாத் மற்றும் வருவாய்த்துறையினர், அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையிலுள்ள சித்தாண்டபுரம் சந்திப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், 2 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், அஞ்செட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அஞ்செட்டி அருகே திம்மானட்டியை சேர்ந்த டிரைவர் ரமேஷ், 30, மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.