ADDED : ஆக 04, 2025 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா ஸ்டேஷன் எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார், தொட்டபூவத்தி கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், தொட்டனுாரிலிருந்து, பூவத்தி பகுதிக்கு, 3 யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த போலீசார், கிருஷ்ணகிரி அருகே ஜாகீர் மோட்டூரை சேர்ந்த லாரி டிரைவர் பெருமாள், 28, என்பவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்த பாலாஜி, 32, என்பவரை தேடி வருகின்றனர்.

