ADDED : ஆக 20, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகலுார், ஓசூர்,
தாசில்தார் குணசிவா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், பாகலுார்
அருகே முகலப்பள்ளி கேட் பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை
செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது,
உரிய அனுமதி சீட்டு இல்லாமல், முகலப்பள்ளியிலிருந்து
பாகலுாருக்கு, 6 யூனிட் எம்.சாண்டை கொண்டு செல்வது தெரிந்தது. அதனால்,
லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் குணசிவா, பாகலுார் போலீசில்
ஒப்படைத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.