ADDED : செப் 29, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்-தமிழ் செல்வராசன் மற்றும் மற்றும் போலீசார், சின்ன பேலகொண்டப்பள்ளி ஜங்ஷன் பகுதியில், நேற்று முன்தினம் மாலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல், மதகொண்டப்பள்ளியிலிருந்து பேலகொண்டப்பள்ளிக்கு ஒரு யூனிட் மண்ணை கொண்டு செல்வது தெரிந்தது. அதனால் லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.