ADDED : ஜூலை 05, 2026 02:55 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வளத்துறை மற்றும் வருவாய்து-றையினர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மிட்டஹள்ளி அறுகே மச்-சிகண்ணன் கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகில் மோரனஹள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் நின்ற ஒரு லாரியை சோதனையிட்-டதில், 3 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.
லாரியை பறிமுதல் செய்த அலுவலர்கள், காவேரிப்பட்டணம் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் பாரதகோவில் பிரகாஷ், 40 என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
