ADDED : ஆக 27, 2026 04:04 AM
பாகலுார்: ஓசூர் அருகே, பாகலுார் - சர்ஜாபுரம் சாலையில் உள்ள கக்கனுார் சோதனைச் சாவடியில், சேவகானப்பள்ளி வி.ஏ.ஓ., முனிகி-ருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று முன்தினம் வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, தமிழக அரசின் தடையை மீறி, 4 யூனிட் எம்.சாண்டை, பேரிகையிலிருந்து கர்நா-டகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிந்தது.லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், பாகலுார் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., முனிகிருஷ்ணன் புகார் படி, லாரியில் வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எனுமுலவாணி பிரவீன், 28, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீநாத், 58, ஆகிய இருவரை, போலீசார் கைது செய்தனர். மேலும், லாரி டிரைவ-ரான விக்ரம் பஸ்வான் மற்றும் லாரி உரிமையாளர் பாபு ரெட்டி ஆகிய, 2 பேரை தேடி வருகின்றனர்.
