ADDED : செப் 30, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி கனிமவளப்பிரிவு உதவி இயக்-குனர் சரவணன் மற்றும் வருவாய் துறை அலுவ-லர்கள் நேற்று முன்தினம் மகாராஜகடை பகு-தியில் ரோந்து சென்றனர்.
அப்போது, ஆத்துக்-காவாய் பஸ் ஸ்டாப் அருகில் நின்ற லாரியை சோதனை இட்டதில், 4 யூனிட் மண் கடத்த முயன்-றது தெரிந்தது. இதுகுறித்து அதிகாரிகள் புகார் படி, மகாராஜகடை போலீசார் லாரியை பறிமுதல் செய்து உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
