ADDED : நவ 18, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு துணை தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அதிகாரிகள், ஓசூர் போக்கு வரத்து சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்தபோது, 9,500 ரூபாய் மதிப்புள்ள, 5 யூனிட் சரளை கற்களை கடத்தி செல்வது தெரிந்தது. லாரியுடன் கற்களை பறிமுதல் செய்த அதி-காரிகள், சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.