ADDED : ஆக 26, 2026 03:06 AM
ஓசூர்: ஓசூரில், 17 வயது கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய, லாரி டிரைவர் கோவிந்தராஜ், 41, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், லாரி டிரைவர். இவர், 17 வயது கல்லுாரி மாணவியுடன், பழகி அவரை, பலாத்காரம் செய்துள்ளார்.
ஆக ., 21 இரவு, மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பெற்றோர் அவரை ஓசூர், அரசு மருத்துவமனையில் அனுமதித்ததில், மாணவி, 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, மாணவிக்கு வலி அதிகரித்த நிலையில், குறை பிரசவத்தில், ஆண் குழந்தை பிறந்து இறந்தது.
ஓசூர் மகளிர் போலீசார் விசாரணையில், 'கோவிந்தராஜ், மாணவியை பலாத்காரம் செய்தது தெரிந்தது. போலீசார், கோவிந்தராஜை, போக்சோவில் கைது செய்தனர். கோவிந்தராஜிற்கு திருணமாகி, இரு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
