ADDED : ஏப் 09, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
பாகலுார் : ஓசூர் அடுத்த பாகலுார் அருகே, சூடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்ராவ், 34. தனியார் நிறுவன மேலாளர்.
பாகலுார் அருகே பெலத்துார் ராஜிவ் நகரை சேர்ந்தவர் வேலு, 27. பாகலுாரில் உள்ள மாலுார் சாலையில், குந்தகை அடிப்படையில் ஒரு கட்டடத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த கட்டடத்தை ஒன்றரை ஆண்டுக்கு முன் வாங்கிய ஜெகதீஷ்ராவ், ஹோட்டலை காலி செய்யுமாறு வேலுவிடம் கூறியுள்ளார்.
ஆனால் காலி செய்ய மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வேலு, ஜெகதீஷ்ராவை கையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். அவரது புகார் படி, பாகலுார் போலீசார் நேற்று முன்தினம், வேலுவை கைது செய்து ஜாமினில்
விடுவித்தனர்.
