ADDED : மே 24, 2026 05:15 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிஜி பஸ்வான், 33. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி கங்கா நகரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்; திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சன் சிங், 29. இவர் அதே பகு-தியில் தங்கி, பானிபூரி கடை நடத்தி வருகிறார். கடந்த, 21ம் தேதி இரவு, 7:30 மணிக்கு, அஞ்சன் சிங் கடைக்கு சென்ற பிஜி பஸ்வான், பானிபூரி வாங்கி சாப்பிட்டார்.
அதற்கு பணம் கொடுக்காததால், அஞ்சன் சிங் பணம் தருமாறு கேட்டு வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, வெங்காயம் வெட்டும் கத்தியால் பிஜி பஸ்வானை வெட்-டினார். இதில் வலது கை, முதுகு, தலையில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவம-னையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார்படி, சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து, அஞ்சன் சிங்கை கைது செய்தனர்.
