/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மில்லில் இரும்பு கேட் திருடியவர் கைது
/
மில்லில் இரும்பு கேட் திருடியவர் கைது
ADDED : நவ 21, 2025 01:44 AM
குளித்தலை ரைஸ் மில்லில் இருந்த, இரும்பு கேட்டை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 50. இவர் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி நிர்வாகி. இவருக்கு சொந்தமான ரைஸ் மில், கருங்காப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. ரைஸ் மில் முன் பகுதியில், மிகப் பெரிய இரும்பு கேட் அமைத்து பாதுகாப்பாக பயன்படுத்தி வந்தார்.
கடந்த 18-ல் இரவு 10:00 மணியளவில் கருங்காபள்ளி கிராமத்தை சேர்ந்த டிரைவர் பாலகுமார், 30, என்பவர், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கேட்டை திருடி, பழைய இரும்பு கடையில் விற்பனைக்கு கொடுத்தார். தகவல் அறிந்த ரைஸ்மில் உரிமையாளர் செந்தில்குமார் பிடித்து, குளித்தலை போலீசாரிடம் ஒப்படைத்தார். மேலும் ரைஸ் மில்லில் நிறுத்தப்பட்டு இருந்த, டிராக்டர் இயந்திரத்தின் உதிரி பாகங்கள். மின் மோட்டார் திருடப்பட்டுள்ளது.குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, டிரைவர் பாலகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

