தனியார் பள்ளி பஸ் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
தனியார் பள்ளி பஸ் டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
ADDED : நவ 19, 2026 01:59 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கோவிந்த அக்ர ஹாரம் அருகே விஷ்ணு ஆனந்தம் வில்லா லே அவுட்டில் வசிப்பவர் பெருமாள்.
இவரது மகன் முனிரத்தினம், 42. ஓசூரிலுள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், பஸ் டிரைவராக பணியாற்றுகிறார். இவருக்கும், காஸ் ஏஜன்சியில் பணியாற்றும், கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த ராஜசேகர், 31, என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 15ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, கோவிந்த அக்ரஹாரத்தில் உள்ள சிக்கன் கடை அருகே வைத்து, முனிரத்தினத்திடம் தகராறு செய்து தகாத வார்த்தையால் திட்டிய ராஜசேகர், இரும்பு கம்பியால் அவரை தாக்கினார். இதில், 3 பற்கள் உடைந்து, வாய் பகுதியில் காயமடைந்த முனிரத்தினம், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகார் படி, ராஜசேகரை சிப்காட் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
