ADDED : மார் 17, 2026 08:06 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜி, 38. கால்பந்து வீரர்; இவர் மீது கடந்த, 11ம் தேதி, பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனால் விரக்தியடைந்த விஜி தலைமறைவாகி கடந்த, 14ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ரங்கசந்திரம் கிராமத்தில் உள்ள தனது நண்பரின் பண்ணை நிலத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார். அங்கு மனமுடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்தார். நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை போலீசார் சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
